உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று(19.10.2024) மாலை அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் எமது ஊடகம் அவரது உறவினர்களை தொடர்புகொண்டு வினவிய போது, உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது அவரது உடல்நிலை சீராகிவருவதாகவும் உறவினர்களால் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.