பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, குறித்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தல் செலவு வரையறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த தேர்தல் செலவுகள் தொடர்பில் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுடன் மாவட்டங்களின் அந்தந்த தெரிவத்தாட்சி அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கலந்துரையாடல்களின் போது எட்டப்படும் முடிவுகளுக்கமைய, வேட்பாளர் ஒருவரால் வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை உள்ளிட்ட விடயங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.