குருநாகல், வாரியப்பொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 39 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் உள்ள பாரிய குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் வாரியப்பொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.