கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உத்துவன்கந்த வலகடயாவ பகுதியில் இன்று காலை 8:15 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.
பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பஸ்ஸின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
பாணந்துறையில் இருந்து வந்த பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதி பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்தின் போது, 18 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கேகாலை தெரிவித்தனர்.