இலங்கை சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் நேற்றையதினம் (06-10-2024) வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள் நாட்டிற்கு திரும்புகின்றனர். கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக விமானம் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக இலங்கை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, அவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.
எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, மத்திய தனியார் மயமாக்கலுக்கான அமைச்சர் அப்துல் அலீம் கான், கைதிகள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதிசெய்து, திருப்பி அனுப்புவது தொடர்பான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறார்.
இவ் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் உயர்ஸ்தானிகருக்கும் மொஹ்சின் நக்வி நன்றி தெரிவித்துள்ளார்.