உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 10 ரூபாவினாலும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உருளைக்கிழங்கு இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாக 10 ரூபாவினாலும், பெரிய வெங்காயத்துக்கான வரி 10 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக 20 ரூபாவினாலும் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.