சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளினை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொளிகள் மூலம் குழந்தைகளின் ஆளுமை, அடையாளம் மற்றும் குழந்தையின் குடும்பப் பின்னணி என்பன அவர்களின் பாதுகாப்பிற்கு பிரச்சினையாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்புக்கு தொடர்பில் அனைத்து பெற்றோர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவதனால் இணையம் மூலம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் ஆணையம் எச்சரித்துள்ளது.
எனவே குழந்தைகளின் பாதுகாப்புக்கு தொடர்பில் பெற்றோர் விளிப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது பிள்ளைகளின் பெறுபேற்று தாளில் உள்ள தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் ஆகியவற்றை இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் எளிதாகப் பெற்று பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட முடியும் என்பதால் சமூகவலைத்தளங்களில் தகவல்களை இடுவதை தவிர்க்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்திருந்தார்.