தமது எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோசன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள விலைகளே ஒக்டோபர் மாதமும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனமும் இம்மாதம் தமது எரிவாயு விலைகளில் மாற்றம் எதனையும் செய்யப் போவதில்லை என்றும் ஏற்கனவே உள்ள விலைகளின் அடிப்படையிலேயே இம்மாதமும் எரிவாயு விற்பனை இடம்பெறும் எனவும் அறிவித்திருந்தது.