நாட்டில் இன்ஃப்ளூவன்சா தொற்று பரவி வருவதால், அது தொடர்பான அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
காய்ச்சல், இருமல், ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதுடன் முறையான சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலமாகவும் சிறுவர்களை நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும் நிபுணர் மேலும் கூறினார்.
மேலும், வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.