தலவாக்கலை, அக்கரபத்தனை – எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் இன்று (03) குளவிக் கொட்டுக்கு இலக்காகி 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் 15 பேரும் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 பேர் சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் எஞ்சிய 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.