வடமராட்சி கிழக்கு J/433 முள்ளியான் கட்டைக்காடு கிராமத்தில் வசிக்கும் மிசாரம் கிடைக்காத 25 குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்புக்கள் வந்தபோதும் அந்த கிராமத்தின் கிராம அலுவலரினால் காணிகள் உறுதிப்படுத்தாமையினால் மின்சார இணைப்புகள் இரத்துசெய்யப்பட்டது.
இதனால் 5 வருடங்களாக காணி அளவீடு செய்யாமல் மருதங்கேணி பிரதேசசெயலக அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்துவருகின்றமை தொடர்பாக பாதிக்கப்பட்டோரினால் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டது.
காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் மாதந்த கூட்டம் ஒவ்வொருமாதமும் கொழும்பில் இடம்பெறும் அந்த வகையில் நேற்று முன்தினம் 01/10/2024. இடம்பெற்ற கூட்டத்தில் இந்த பிரச்சனை எடுத்துசொல்லப்பட்டது.
சம்மந்த பட்ட அதிகாரிகளுக்கு அதற்கு அமைவாக எதிர் வரும் கிழமைகளில் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தேசிய ரிதியிலான குழுவினர் காணிப்பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவ்விடயங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைகளை செய்யவுள்ளதாக யாழ்மாவட்ட காணிஉரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் தேசிய ரீதியில் காணிபிரச்சனைகளை கையாள்வதற்குமான. தலைவருமான முரளிதரன் தெரிவித்தார்.