வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) 2002 ம் ஆண்டு உயர்தரம் கல்வி பயின்ற பழைய மாணவர்களால் இன்றைய தினம் (28) துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது
கடந்த 2002ம் ஆண்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தரம் கற்ற பழைய மாணவர்கள் ஒன்றினைந்து வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பு செய்திருந்தனர்
வவுனியா மாவட்டத்தில் பெண் தலைமை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், பெற்றார் இல்லாத மாணவர்கள், மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள வெவ்வேறு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் என 101 மாணவர்களை அடையாளம் கண்டு, கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமும் தகவல்களை உறுதிப்படுத்திய பின்னர் குறித்த 101 மாணவர்களுக்கும் இன்றைய தினம் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வைத்து துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்திருந்தனர்
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், வவுனியா நகர கிராம சேவகர், பாடசாலையின் அபிவிருத்தி குழு செயலாளர், பழைய மாணவர் சங்க செயலாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் நுழைவாயிற் கோபுரத்தையும் குறித்த 2002 உயர்தர பழைய மாணவர்களானிலேயே அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது