கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப்பொதிகளை திறந்து உள்ளே இருந்த பொருட்களை திருடிய விமான நிலைய ஊழியர் ஒருவரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர், இலங்கை விமானச் சேவையில் பணிபுரியும் ஊழியர் என தெரியவந்துள்ளது.
மலேசியாவில் இருந்து கடந்த 23ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகளின் பயணப் பொதிகள் வைக்கப்பட்டிருந்த விமான நிலையப் பயணப் பொதி பகுதிக்குள், இரகசியமான முறையில் நுழைந்த குறித்த ஊழியர், பயணப் பொதிகளில் இருந்த பொருட்களை திருடியமை பாதுகாப்பு கெமரா அமைப்பில் பதிவாகியிருந்து.
கெமரா காட்சிகளை அவதானித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவர் குறித்த தகவலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு வழங்கியதை அடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக பயணிகளின் பயணப் பொதிகளில் உள்ள பொருட்கள் காணாமல் போவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருதந்து.
பின்னர் அது தொடர்பில் அவதானம் செலுத்திய நிலையில் இந்த ஊழிர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.