ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேச பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் தனது வீட்டுக்கு 08 மாணவர்களை வேலைக்கு அமர்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிலும் மாணவர்களின் பெற்றோர் முறைப்பாடை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த 08 மாணவர்களையும் பாடசாலை நிறைவடைந்தவுடன் பாடசாலை சீருடையுடன் தனது வீட்டுக்கு அழைத்து சென்று அங்குள்ள வேலைகளை செய்யுமாறு அதிபர் வற்புறுத்தியுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் கூறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள்த் தொடர்சியாக தமது வீடுகளுக்கு தாமதமாக வருவதால் மாணவர்களிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். புpன்னர் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு இதுகுறித்து மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் செயலாளருக்கும் முறைபாடுப் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சிறுவர்கள் தொடர்பாக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மாணவர்களை தொழிலுக்கு அமர்த்திய பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக வலயகல்வி பணிமனையும் மத்திய மாகாண கல்வி திணைக்களமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.