மஸ்கெலியா – புரவுன்சீக் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 39 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில் 35 பெண்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், மூன்று பெண்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.