வவுனியா போகஸ்வெவ பகுதியில் போத்தலால் தன்னைத்தானே தாக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் மாலை போத்தல் ஒன்றின் மூலம் தனது வயிற்றுப்பகுதியில் குத்தியுள்ளார்.
இதனால் காயமடைந்த அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
சம்பவத்தில் போகஸ்வெவ பகுதியை சேர்ந்த சமன்குமார என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி வெளிநாடு ஒன்றில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.