1867
கொழும்பிலிருந்து கண்டி வரையிலான முதலாவது தொடர்வண்டி சேவை நடத்தப்பட்டது.
1981
மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படு கொலை செய்யப்பட்டனர்.
1903
அத்லெடிகோ மாட்ரிட் கால்பந்து கூட்டமைப்பு அணி உருவானது.
1923
யோர்க் இளவரசர் எலிசபெத் போவ்சு லியோனைத் திருமணம் புரிந்தார்.
1937 –
எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில், கேர்னிக்கா நகரம் நாட்சிகளின் வான்படையினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1942
மஞ்சுகோ நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 1549 சீன சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1943
சுவீடன், உப்சாலா நகரில் உயிர்ப்பு ஞாயிறுக் கலவரம் ஆரம்பமானது.
1944
ஜியார்ஜியோசு பப்பாந்திரேயு எகிப்தில் இருந்து நாடு கடந்த நிலையில் தன்னை கிரேக்கத்தின் அரசுத்தலைவராக அறிவித்தார்.
1945
இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.
1954
இந்தோசீனா, மற்றும் கொரியாவில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1960
ஏப்ரல் புரட்சியை அடுத்து தென்கொரியாவின் அரசுத்தலைவர் சிங்மான் ரீ 12 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் பதவி விலகினார்.
1962
நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.
1963
லிபியாவில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1964
தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
1966
தாஷ்கந்து நகரில் 5.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1981
உலகில் முதல் தடவையாக திறந்த கருப்பை அறுவை சிகிச்சை அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
1982
தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையிர் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1986
சோவியத் ஒன்றியம், உக்ரைனில் செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
1989
உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்று வங்காள தேசத்தின் நடுப்பகுதியைத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர்.
1994
ஜப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் உயிரிழந்தனர்.
2005
29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.
2015
கஜகஸ்தானின் வரலாற்றில் இடம்பெற்ற வாக்களிப்பில் முன்னாள் ஜனாதிபதி நர்சுல்தான் நசர்பாயேவ் 97.7% வாக்குகளுடன் வெற்றி பெற்று கஜகஸ்தானின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.





