மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் முதல் கனத்த மழை பெய்தது வருகிறது.
இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை காரணமாக பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை, பண்ணையாளர்களின் இயல்பு வாழ்க்கை என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது சொந்த இல்லங்களுக்கு திரும்பி சென்றனர்.
கன மழை காரணமாக ஓடைகள் மற்றும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடும் குளிர் நிலவி வருகிறது. எங்கும் பனிமூட்டமாக காணப்படுகின்றது. இதனால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.