வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்றைய தினம் 25.04.2025 கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டமானது காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள் தெரிவிக்கயில்,
2984-வது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமது உறவுகளைத் தேடி அலைந்து திரிவதாகவும் இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசாங்கமும் எமக்கான உரிய தீர்வினை பெற்றுத் தரவில்லை எனவும் சர்வதேசத்திடம் ஒரு முகமும் எம்மிடம் ஒரு முகமுமாக அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் தற்போதைய அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எமது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய தீர்வு பெற்று தரப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் எந்த விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தனர்.




