2006
கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற் கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன் 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
1804
மேற்கு ஜோர்ஜியாவின் இமெரெட்டி இராச்சியம் ரஷ்யப் பேரரசின் மேலாட்சியை ஏற்றுக் கொண்டது.
1829
சார்ல்ஸ் பிரெமாண்டில் மேற்கு அவுஸ்திரேலியாவில் சலேஞ்சர் என்ற கப்பலில் தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1846
டெக்சசு எல்லை தொடர்பான பிரச்சினை மெக்சிக்கோ-அமெரிக்கப் போருக்கு வழிவகுத்தது.
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தன.
1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர்.
1864
அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர்.
1898
எஸ்ப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கா எஸ்ப்பானியா மீது போரை அறிவித்தது.
1915
முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர்த்தொடர் ஆரம்பமானது. அவுஸ்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டன.
1916
அன்சாக் நாள் முதல் தடவையாக நினைவு கூரப்பட்டது.
1945
ஐக்கிய நாடுகள் அவையை நிறுவுவதற்கான ஆலோசனைகள் சான் பிரான்சிஸ்கோவில் 50 நாடுகளின் பங்களிப்போடு ஆரம்பமாயின.
1945
இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜேர்மனிய ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. பெனிட்டோ முசோலினி கைது செய்யப்பட்டார்.
1945
இரண்டாம் உலகப் போர்: கடைசி நாட்சிப் படையினர் பின்லாந்தில் இருந்து விலகினர்.
1951
கொரியப் போர்: காப்பியாங் நகரில் ஐநா படைகளுடன் நடந்த பெரும் மோதலை அடுத்து, சீனப் படைகள் விலகின.
1953
பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் டூயி வாட்சன் ஆகியோர் டி. என். ஏ.யின் இரட்டை வட அமைப்பை வெளியிட்டனர்.
1954
முதலாவது செயல்முறை சூரிய மின்கலம் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1961
ராபர்ட் நாய்சு தொகுசுற்றுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1974
போர்த்துகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1981
ஜப்பானின் சுருகா அணுமின் நிலையத்தில் நூற்றிற்கும் அதிகமான தொழிலாளர்கள் கதிர்வீச்சுத் தாக்கத்திற்கு உள்ளாயினர்.
1982
காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இசுரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது.
1983
பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
1986
எசுவாத்தினியின் மன்னராக மூன்றாம் முசுவாத்தி முடிசூடினார்.
1988
இரண்டாம் உலகப் போரில் இழைத்த போர்க்குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் மரண தண்டனை விதித்தது.
2005
இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700 ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எத்தியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
2005
பல்காரியா, உருமேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
2015
நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.




