நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட இரணைதீவு வட்டாரத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நாச்சிக்குடா – கரடிக்குன்றுப் பகுதியில், கட்சியின் இரணைதீவு வட்டார வேட்பாளர் அனற் ஜெனதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு, மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், மேனாள் உபதவிசாளர் முடியப்பு எமிலியாம்பிள்ளை, கட்சியின் இரணைதீவு வட்டாரக் கிளைத்தலைவர் முஹமது சலீம், வேட்பாளர்களான பிலிப்றெஜினோல்ட் நிவிந்தன், பத்மசேனன் லிடான்ரியூடர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




