புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார்.
தூதரகத்திற்கு வந்த ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக் நன்சியோ, பேராயர் பிரையன் உதய்க்வே வரவேற்றார். பின்னர், திருத்தந்தையுடன் ஒரு சுருக்கமான உரையாடலை மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் ஒரு குறிப்பை எழுதி உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை அரசாங்கமும் மக்களும் இரங்கல் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
ADVERTISEMENT