அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி உள்ளது.
அமெரிக்காவிற்கு குறுகிய காலத்திற்கு (90 நாட்கள் வரை) விசா இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பை Visa Waiver Program (VWP) வழங்குகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 41 நாடுகளின் குடிமக்கள் சுற்றுலா அல்லது வணிக நோக்கில் அமெரிக்கா செல்லலாம், எந்த விசா நேர்காணலும் தேவையில்லை.
இந்த திட்டத்தில் பங்கேற்கும் நாடுகள்
பிரித்தானியா, அன்டோரா, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், புருனே, சிலி, குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், கத்தார், கொரிய குடியரசு, ருமேனியா, சான் மரீனோ, சிங்கப்பூர், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் தைவான் .
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைய சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மற்றும் பயணத்திற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட ESTA-வை பெற வேண்டும்.
ESTA என்றால் என்ன?
ESTA (Electronic System for Travel Authorization) என்பது ஓன்லைன் மூலம் பெறவேண்டிய முன்அனுமதி. இது அமெரிக்காவின் சுங்கத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. ESTA இல்லாமல் விமானம் ஏற முடியாது. அனுமதி கிடைத்தால் 2 ஆண்டுகள் செல்லுபடியாகும் (அல்லது பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை).
விசா Waiver இருந்தாலும் விசா தேவைப்படுமா?
ஆம், சில பயணிகளுக்கு விசா தேவைப்படலாம். உதாரணமாக:
2011-ம் ஆண்டு மார்ச் 1-க்கு பிறகு இரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, வட கொரியா, சூடான், எமன் போன்ற நாடுகளில் பயணம் செய்திருந்தால்.
2021 ஜனவரி 12-க்கு பிறகு க்யூபா சென்றிருந்தால்.
மேற்கண்ட நாடுகளில் இரட்டை குடியுரிமை இருந்தால்.
இந்த நிலையில் பயணிக்க விரும்பும் ஒருவர் B1/B2 விசாக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விசா Waiver இருந்தாலும் விசா தேவைப்படுமா?
ஆம், சில பயணிகளுக்கு விசா தேவைப்படலாம். உதாரணமாக:
- 2011-ம் ஆண்டு மார்ச் 1-க்கு பிறகு இரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, வட கொரியா, சூடான், எமன் போன்ற நாடுகளில் பயணம் செய்திருந்தால்.
- 2021 ஜனவரி 12-க்கு பிறகு க்யூபா சென்றிருந்தால்.
- மேற்கண்ட நாடுகளில் இரட்டை குடியுரிமை இருந்தால்.
இந்த நிலையில் பயணிக்க விரும்பும் ஒருவர் B1/B2 விசாக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியக் கட்டுப்பாடுகள்:
- VWP நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது
- செல்லுபடியாகும் ESTA அனுமதி
- 90 நாட்களுக்கு குறைவான பயணம்
- சுற்றுலா அல்லது வணிக நோக்கம்
- குறித்த நாடுகளில் சமீபத்தில் பயணம் செய்யாமை
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ ESTA இணையதளத்தை பார்வையிடவும் – https://esta.cbp.dhs.gov/