திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) பகல் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டி சாரதியான மூதூர் -ஆனைச்சேனையைச் சேர்ந்த ஹதியத்துல்லாஹ் நஸீர் என்ற 62 வயதுடையவர் என தெரியவருகிறது.
சிறிய கெப் வாகனம் ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மூதூர் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கெப் வாகனச் சாரதி மூதூர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



