1964
இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டத்திற்கெதிராக செல்லையா கோடீஸ்வரன் என்பவர் தொடுத்த வழக்கில் இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2007
பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1800
அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது.
1863
கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படு கொலை செய்யப்பட்டனர்.
1877
ரஷ்யா உதுமானியப் பேரரசு மீது போர் தொடுத்தது.
1895
உலகத்தை தனியாளாக முதற்தடவையாக சுற்றிய யோசுவா சிலோக்கம் மாசச்சூசெட்ஸ் பாஸ்டனில் இருந்து ஸ்பிறே என்ற படகில் புறப்பட்டார்.
1908
லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
1915
கான்ஸ்டன்டீனபோலில் 250 ஆர்மீனிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்மீனிய இனப் படு கொலை ஆரம்பமானது.
1915 – 1916
தென்முனைப் பெருங்கடலில் மூழ்கிய என்டூரன்சு கப்பலையும், அதன் மாலுமிகளையும் மீட்கும் பொருட்டு ஏர்னெஸ்டு சாக்கில்டனும் மேலும் ஐவரும் யானைத் தீவு என்ற ஆளில்லா தீவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
1916
அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர்.
1918
முதலாம் உலகப் போர்: தாங்கிகளுக்கிடையேயான முதலாவது சமர் இடம்பெற்றது. பூன்று பிரித்தானியத் தாங்கிகளும், ஜேர்மனியின் மூன்று தாங்கிகளும் போரில் ஈடுபட்டன.
1926
ஜேர்மனி, சோவியத் ஒன்றியம் இரண்டும் மூன்றாவது நாடு ஒன்று மற்றைய நாட்டைத் தாக்க முற்படும் போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடுநிலைமை வகிக்கும் உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டது.
1933
நாட்சி ஜெர்மனி யெகோவாவின் சாட்சிகள் மீதான மத ஒறுப்பை ஆரம்பித்தது.
1955
இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1957
சுயெசு நெருக்கடி: ஐ.நா அமைதிப்படை தருவிக்கப்பட்டதை அடுத்து சுயஸ் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டது.
1961
17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “வாசா” என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.
1965
டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1967
சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது வான்குடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
1970
காம்பியா பொதுநலவாயத்தின் கீழ் குடியரசானது. தவ்தா யவாரா அதன் முதலாவது ஜனாதிபதியானார்.
1990
டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1993
இந்தியாவில் பஞ்சாயத்து இராச்சியம் அமைக்கப்பட்டது.
1993
லண்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.
2004
ஐக்கிய அமெரிக்கா லிபியா மீது 18 ஆண்டுகளுக்கு முன்னர் விதித்த பொருளாதாரத் தடையை நீக்கியது. லிபியா பேரழிவு ஆயுதங்களை அழிக்க உடன்பட்டது.
2005
கர்தினால் யோசப் ராத்சிங்கர் கத்தோலிக்க திருச்சபை பதினாறாம் பெனடிக்டு என்ற பெயரில் 265ஆவது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
2006
நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
2013
வங்காளதேசம், டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர்.




