நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மருந்துகளை பெற்று கொள்ள சிரமப்பட வேண்டி உள்ளதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு வருபவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களோ அல்லாது தேசிய அடையாள அட்டை எடுப்பவர்களோ கடவுச்சீட்டு எடுக்க வருபவர்கள் அல்ல இங்கே வருபவர்கள் அத்தனை பேரும் நோயாளர்கள் எனவே இந்த வரிசையில் மூன்று நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்து மருந்துகளை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதனால் தூர பிரதேசத்தில் இருந்துவரும் நோயாளர்கள் இந்த கால தாமதம் காரணமாக வீடு செல்ல பேருந்து இல்லாமல் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதை கட்டாயமாக அரசாங்கம், நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மாத்திரம் இன்றி இங்கு வருபவர்கள் மிகவும் தூர பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் எனவே அந்த நோயாளர்களின் நலன் கருதியும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கின்றனர்.

