குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று மதியம் 3 மணிக்கு இடம் பெற்றது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை கவரவிலை ஏ பிரிவில் வசிப்பவர்கள் எனவும் அதில் ஒருவர் தோட்ட தொழிலாளர் ஏனைய மூன்று பேரும் வழி போக்கர்கள் எனவும் இந்த நால்வரும் சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மூவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 35 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.