மன்னாரில் இருந்து கொழும்பு பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன்களை ஏற்றி வரும் பாரவூர்திக்குள் மீன் பெட்டிகளுக்குள் மறைத்து வைத்து 80 லட்சம் பெறுமதி வாய்ந்த 2 கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் மேல் மாகாண தென்பகுதி குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள வீடமைப்புத் தொகுதியில் வாழும் 44 வயதுடைய சந்தேக நபர் இவ்வாறு பல முறை போதைப்பொருட்களை கொழும்பு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மன்னார் பிரதேசத்தில் மீன்பிடிக்க செல்லும் வள்ளங்களில் இந்தியாவில் இருந்து இந்த கடற்பிரதேசங்களில் மீன்பிடிப்பதற்காக வரும் இந்திய மீனவர்களால் இலங்கை கடலோரத்திலிருந்து இப்போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் நடைபெறுவதாக சந்தேக நபரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணையை சந்தேக நபரிடம் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.