வடமாகாண பேண்தகு அபிவிருத்திக்கான கொள்கை ஒத்திசைவை மேம்படுத்துவதற்கான துறைசார்ந்தவர்களின் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
சுற்றாடல் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து குறித்த கொள்கை திட்டத்தை தயாரிக்கவுள்ளன.
இன்றைய கலந்துரையாடலில் யாழ்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ரெ.சுவந்தினி, பேராசிரியர் க.கஜபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT






