1905
யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து (வண்டி) கொண்டுவரப்பட்டது.
1993
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பு கிருலப்பனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
1815
உதுமானியப் பேரரசுடன் செர்பியா இணைக்கப்பட்டதை அடுத்து செர்பியர்களின் இரண்டாவது புரட்சி ஆரம்பமானது.
1867
சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.
1879
நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தின் கட்டடம் ஒன்று தீயில் எரிந்து சேதமடைந்தது.
1932
நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.
1940
மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் உயிரிழந்தனர்.
1941
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதென்ஸ் நகரை விட்டு வெளியேறினார்.
1945
இரண்டாம் உலகப் போர்: எர்மன் கோரிங் நாட்சி ஜெர்மனியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு அனுமதி கேட்டு கிட்லருக்குத் தந்தி அனுப்பினார்.
1949
சீன உள்நாட்டுப் போர்: மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அமைக்கப்பட்டது.
1966
முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.
1967
சோவியத்தின் சோயுஸ் 1 விண்கலம் விளாதிமிர் கொமொரோவுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1971
வங்காளதேச விடுதலைப் போர்: பாகிஸ்தான் இராணுவம் கிழக்குப் பாகிஸ்தானில் (இன்றைய வங்காளதேசம்) ஜதிபாங்கா என்ற இடத்தில் 3,000 இற்கும் அதிகமான இந்துக்களைக் கொன்றனர்.
1987
ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1990
நமீபியா ஐ.நாவில் 160ஆவது உறுப்பு நாடாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 50ஆவது உறுப்பு நாடாகவும் சேர்க்கப்பட்டது.
1993
இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.
1993
எரித்திரியாவில் ஐ.நாவின் கண்காணிப்பில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
1997
அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படு கொலை செய்யப்பட்டனர்.
2005
முதலாவது யூடியூப் காணொளி “ஜாவெட்” என்பவரால் வெளியிடப்பட்டது.
2013
ஈராக்கில் அவீஜா நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 28 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.
2018
கனடா, தொராண்டோவில் வாகனம் ஒன்று நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.
2019
ஏப்ரல் 2019 இல் மியான்மரில் ஹபகாந்த் ஜேட் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நான்கு சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் இரண்டு மீட்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர், குறைந்தது 50 பேர் காணாமல் போயினர்.
2024
மலேசியாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்தனர். மலேசிய கடற்படை நாளுக்காக நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியின்போது இந்த விபத்து ஏற்பட்டதால் நாடே சோகமயமானது.




