முல்லைத்தீவு கரைதுரைபற்று பிரதேச சபையின் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் பிமல் ரத்தினாயக்க கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
முல்லைத்தீவு தன்னீரூற்று பகுதியில் கரைதுரைபற்று பிரதேச சபைக்கு போட்டி இடும் வேட்பாளர்களை ஆதரித்து நெடுஞ்சாலை போக்குவரத்து சிவில் விமானசேவை அமைச்சர் பிமல் ரத்தினாயக்க உரையாற்றும் போது, சென்ற அரசாங்கத்தில் சூறையாடப்பட்ட உயர் மட்ட அதிகாரிகளை தங்களுடைய அரசாங்கம் அவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பிரதேச சபையை வெற்றி பெறச் செய்தால் கிராமங்களில் இருக்கும் கள்வர்களையும் ஓரங்கட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் போது முல்லைத்தீவு மாவட்ட தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் இந்திக்க, அமைப்பாளர் யோ.சிவரூபன், கட்சி ஆதரவாளர்கள், வேட்பாளர்கள், பொது மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

