ஹிஸ்புல்லாஹ் செய்த குற்றங்கள் பல நூறு.
இவர் ஒரு ஒட்டுக்குழு உறுப்பினர் ஆவார். பன்னிரண்டு இந்து ஆலயங்களை இடித்து அழித்து அங்கு மசூதியும், பேருந்து நிலையமும் கட்டியதுடன், நீதிபதியை மாற்றி தீர்ப்பை தனக்கு சாதகமாக எழுத வைத்தார். இதனை தனது வாயாலே கூறி இருந்தார்.
மேலும், ஜிகாத் எனும் துணை இராணுவக் குழுவிலிருந்து பல பயங்கர படு கொலைகள், பெண்களை சீரழிப்பு செய்தமை என்பன சமீபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்பொழுது ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.
இதில் இவரும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆவார்.
நேற்று முன்தினம் (20) காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இவர் தெரிவித்ததாவது,
தங்களது அரசியல் தேவைகளுக்காக, ஆட்சிகளை கொண்டுவருவதற்காக, ஆட்சிகளை உருவாக்குவதற்காக சிலரால் முஸ்லிம் இளைஞர்களை திசைதிருப்பி இவ்வாறு மிக மோசமான செயலை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களுடைய குடும்பங்களுக்காக பிராத்திக்கிறோம். நாங்கள் மிகவும் மனவேதனை அடைந்தோம். இன்னமும் வேதனை அடைகிறோம்.
காத்தான்குடி பிரதேசம் அநியாயமாக பல சோதனைகளையும் சவால்களையும் சந்திந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
தற்போதுதான், சில உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. யார் பிண்ணணியில் இருந்தார்கள், யார் இதை செய்தார்கள் போன்ற உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கிளீன் ஸ்ரீலங்கா