2000
ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
1946
மலாயாவில் ஜப்பானின் ஆக்கிரமிப்பில் 5 ஆண்டுகளாக இருந்த இலங்கையரின் முதலாவது தொகுதியினர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
1809
ஆஸ்திரிய இராணுவம் நெப்போலியன் தலைமையிலான முதலாம் பிரஞ்சு பேரரசு இராணுவத்திடம் தோற்றது.
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர் : ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெஞ்சமின் கிரியெர்சன் தலைமையில் நடு மிசிசிப்பியைத் தாக்கினர்.
1889
ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி ஆகியவற்றில் கிட்டத்தட்ட 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றி குடியேறினர்.
1898
எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு எசுப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.
1906
இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஏதென்சு நகரில் ஆரம்பமானது.
1912
ரஷ்சியாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை பிராவ்தா சென் பீட்டர்ஸ்பேர்கிலிருந்து வெளிவர ஆரம்பித்தது.
1915
முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர நகரில் ஜேர்மனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.
1930
ஐக்கிய இராச்சியம், ஜப்பான், அமெரிக்கா ஆகியன நீர்மூழ்கிக் கப்பல் போர்முறையின் சீர்மை குறித்தான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
1944
இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஜயபுர என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1945
இரண்டாம் உலகப் போர்: குரோவேசியாவில் ஜசெனோவாச் வதை முகாம் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.
1945
இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற கிட்லர் பதுங்கு அறையில் இருந்தவாறு தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, தற்கொலையே ஒரே வழியெனக் கூறினார்.
1948
அரபு – இஸ்ரேல் போர்: இஸ்ரேலின் முக்கிய துறைமுக நகரான கைஃபா அரபுப் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
1970
முதலாவது புவி நாள் கொண்டாடப்பட்டது.
1972
வியட்நாம் போர்: வியட்நாமில் அமெரிக்கக் குண்டுவீச்சுகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க் நகரம், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
1977
ஒளியிழை முதற்தடவையாக நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
1983
கிட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற ஜேர்மனிய இதழ் அறிவித்தது. ஆனால் இக்குறிப்புகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டது.
1992
மெக்சிக்கோவில் குவாதலகாரா என்ற இடத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்.
1997
அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1997
பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரசுப் படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
2004
வட கொரியாவில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 150 பேர் உயிரிழந்தனர்.
2005
ஜப்பானியப் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமி யப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கேட்டார்.
2006
நேபாளத்தில் மன்னருக்கெதிராக கலகத்தில் ஈடுபட்ட மக்களாட்சிக்கு ஆதரவானோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.
2006
இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
2014
காங்கோவில் கட்டாங்கா மாகாணத்தில் தொடருந்து விபத்து ஒன்றில் 60 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.
2016
புவி சூடாதலைத் தவிர்ப்பதற்கான உதவிகள் குறித்த உடன்பாடு பாரிசு நகரில் எட்டப்பட்டது.




