கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கோமரங்கடவல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய ரொஷான் அக்மீமன அவர்களும் இன்று (21) திருகோணமலை மாவட்ட கோமரங்கடவல பிராந்திய மருத்துவமனை மற்றும் பிரதேச சபைக்கு ஒரு குறுகிய கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.
கோமரங்கடவல பிராந்திய மருத்துவமனையில் உள்ள பிரச்சினைகள் ஆராயப்பட்டு அந்தப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க குறித்த பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளும் இதன் போது எடுக்கப்பட்டன.

ADVERTISEMENT



