எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக கிராம உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது இன்று (21) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் கிராம உத்தியோகத்தர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் அவர்களினால் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் கிராம உத்தியோகத்தர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் இதன்போது வழங்கப்பட்டது.
இச்செயலமர்வில் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




