சமூகத்தின் சாபக்கேடுகள் : காட்டிக்கொடுப்பும், கூட்டிக் கொடுப்பும்….
சிவனேசதுறை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கின்றார். அவ்வாறு இருக்கையில், அவர் சிறைச்சாலையில் இருந்து கொண்டு ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிடுவது என்பது சாத்தியமற்றது. மேலும், முஸ்லிம்களைப் பற்றி நன்கு அறிந்த ஒருவரால் மட்டுமே அத்தகைய ஒரு புத்தகத்தை எழுத இயலும்.
அந்தப் புத்தகத்தை உண்மையில் எழுதியது, பிள்ளையானுடன் சிறையில் இருந்தவரும், ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடையவருமான மீரா கலீல் என்பவர் தான். இதுவே உண்மை. அது மட்டுமல்லாமல், சிறைச்சாலையில் ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய சஹ்ரானுடன் தொலைபேசி உரையாடலை ஏற்படுத்திக் கொடுத்ததும் இந்த மீரா கலீல் தான். அவன் சிறைச்சாலையில் இருந்து, புலனாய்வுப் பிரிவில் இருந்த அவனுடைய மகன் இர்பான் ஊடாக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, கான்பிரன்ஸ் கோல் மூலம் பிள்ளையானுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தான்.
இந்த இர்பான், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சுரேஷ் சாலி என்று அழைக்கப்படும் நபருக்குக் கீழ் பணியாற்றியவன். தற்போது அவன் விடுவிக்கப்பட்டு வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறான். இந்த இர்பான், அவனுடைய தந்தை மீரா கலீலையும், லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள டைலர் முஸ்தவாவின் மகன் நிப்ராஸையும், டயர் கடை சதாமையும் உடனடியாகப் பிடித்து விசாரித்தால் இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மை வெளிவரும்.
அதுமட்டுமின்றி, சிறைச்சாலையில் இருந்து மீரா கலீல் வெளியே வந்ததும், காத்தான்குடிக்குச் சென்று, அங்கு சஹ்ரான் குழுவைச் சேர்ந்த நபர்களைச் சந்தித்து, “நான் உங்களோடு சிறைச்சாலையில் வைத்து உரையாடியதாக எங்கும் கூற வேண்டாம்” என்று எச்சரித்து விட்டு வந்துள்ளான். டயர் கடை சதாம் என்பவன், மீரா கலீல் சிறையில் இருந்த போது வெள்ளிக்கிழமைதோறும் அவருக்கு வீட்டுச் சாப்பாடு கொண்டு சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி, மட்டக்களப்பில் இருக்கும் பிள்ளையானின் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று அங்குள்ள நபர்களையும் அவர் சந்தித்துள்ளார் என்று அறியப்படுகின்றது. உடனடியாக இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டால், சில முக்கியமான உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.



