தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பு நடைபெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், கரைச்சி பிரதேச சபையின் பிரதான வேட்பாளர் ச.சபாரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பாக பலர் கூறுகின்றனர். நாங்கள் நீதியைப்பெற்றுத்தர மாட்டோம் என்று உண்மையான நீதியை சட்டத்துறை மூலம் பெற்றுக்கொடுப்போம் அதற்கான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். அதற்கான பூர்வாங்க வேலைகள் நிறைவு பெற்றுள்ளன. வெகு விரைவில் குற்றவாளிகள் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள். நாங்கள் கூறிய அனைத்தையும் செய்வோம்.
ஊடக சுகந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது பல தமிழ் அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அதுவும் வெளிவரும் ஈஸ்ரர் தாக்குதல் அரசியலுக்காக செய்யப்பட்டது. மக்களின் கருத்தும் எமது கருத்தும் உள்ளது. அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக மக்களை எவ்வளவு பகடைக்காய்களாக பயன்படுத்தினார்கள். இந்த மக்களுக்கு நியாயத்தை கூற வேண்டிய தேவை இருக்கின்றது. அது வெகுவிரைவில் வெளிவரும்.

