1987
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனர்.
2019
இலங்கை உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் கொழும்பு உட்படப் பல இடங்களில் உயிர்த்த ஞாயிறு நாளன்று (Easter Sunday) மூன்று கிறித்தவத் தேவாலயங்கள், நான்கு உணவகங்களில் இஸ்லாமிய அரசு ஆதரவில் தேசிய தவ்கீத் ஜமாத் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1802
அப்துல்-அசீசு பின் முகம்மது தலைமையிலான 12,000 வகாபிகள் கர்பலா என்ற இன்றைய ஈராக்கிய நகரை முற்றுகையிட்டு, அங்கிருந்த 3,000 மக்களைக் கொன்று நகரைச் சூறையாடினர்.
1821
பென்டெர்லி அலி பாசா உதுமானியப் பேரரசின் பிரதமராகப் பதவியேற்று கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தார். இவர் ஒன்பது நாட்கள் மட்டுமே இப்பதவியில் நீடித்தார், பின்னர் இவர் நாடு கடத்தப்பட்டார்.
1856
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் எட்டு-மணி நேர வேலையைக் கோரி கட்டடத் தொழிலாளிகள் நாடாளுமன்றத்திற்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றார்கள்.
1898
எஸ்ப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படை கியூபாவின் துறைமுகங்கள் மீது முற்றுகையிட்டது. அமெரிக்க சட்டமன்றம் ஏப்ரல் 25 இல் போர்ப் பிரகடனம் அறிவித்திருந்தாலும், போர் நிலை இந்நாளில் இருந்தே ஆரம்பித்தது.
1926
நான்கு சியா இமாம்களின் கல்லறைகள் அடங்கிய அல்-பாக்கி இடுகாடு (இன்றைய சவூதி அரேபியாவில்) வகாபுகளினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
1944
பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1945
இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
1960
பிரசிலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
1964
டிரான்சிட்-5பிஎன் என்ற செயற்கைக்கோள் சுற்றுவட்டத்தில் இணைய முடியாமல் வளி மண்டலத்தினுள் மீளத் திரும்பியது. 0.95கிகி கதிரியக்க புளுட்டோனியம் பரவலாக சிதறியது.
1966
ராஸ்தஃபாரை: எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி ஜமேக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
1967
கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜியோசு பப்படபவுலோசு இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
1975
வியட்நாம் போர்: தென் வியட்நாம் அரசுத் தலைவர் நியூவென் வான் தியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.
1989
தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்: பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
1993
பொலிவியாவில் முன்னாள் அரசுத்தலைவர் லூயிசு கார்சியா மேசா என்பவருக்கு கொலை, ஊழல், அரசமைப்பு மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
2004
ஈரானில் பசுரா நகரில் ஐந்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 74 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.
2012
நெதர்லாந்தில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 116 பேர் காயமடைந்தனர்.




