இலங்கையில் நாளை (22) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மழையுடனான (வெப்பச்சலனம்) வானிலை நிலவ எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மழையுடனான வானிலை மே மாதம் இரண்டாம் வாரம்வரை நீடிக்கவும் வாய்ப்பு உள்ளத்துடன், இதன்போது பிற்பகல், இரவு, அதிகாலையில் ஆங்காங்கே மழை கிடைக்கவும் சாத்தியம் உள்ளது.
மேலே குறிப்பிட்ட நாட்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை, காற்றுக்குவிதல், காற்றின் திசை, வேகம் என்பவற்றிற்கேற்ப நிகழ்நேர காரணிகளின் அடிப்படையிலேயே மழை அளவு, மழை கிடைக்கும் இடங்கள் தீர்மானிக்கப்படும்.
என்றாலும் இரு மாகாணங்களிலும் குறிப்பிட்ட நாட்களில் திரட்டிய மழையளவானது 100mm ஐ எட்டியதாக விஞ்சியதாகக் காணப்படும்.