வவுனியாவிற்கு பிரதமர் நாளை (20.04) வரவுள்ள நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டனர்.
குறிப்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (20.04) மாலை 5 மணிக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உக்குளாங்குளம் சீர்திருத்த விளையாட்டு மைதானத்தில் தோதல் பரப்புரைக் கூட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில், குறித்த பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதார பரிசோதகர்கள், சிவில் பாதுக்கப்பு குழுவினர், சீர்திருத்த விளையாட்டுக் கழகத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் அப் பகுகளில் நீர் தேங்கி நிற்கும் வகையில் காணப்பட்ட பொருட்கள், குப்பை கூழங்கள் என்பன அகற்றப்பட்டதுடன், பிரதேச சபை வாகனஙகளின் உதவியுடன் அவை அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும், நீர் தேங்கா வண்ணம் வீட்டுச் சூழலையும், அயல் சூழலையும் பாதுகாக்குமாறும் அப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டது.









