ஈஸ்டர் கொலைக் குற்றச்சாட்டின் பிரதான தற்கொலையாளி சஹ்ரானின் மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் இன்று பொரளைப் பொலீசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் அவர்கள் விக்கப்பட்டுள்ளனர்.
பொலீசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இவர்கள் பயணித்த பஸ் வண்டி பொலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பூரண விசாரணையின் பின் இவர்கள் தொடர்பில் சந்தேகத்துக்குரிய விடயங்கள் எதுவும் தென்படாததால் இவர்கள்
விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பச் சுற்றுலா ஒன்றிற்காக தாம் கொழும்பு வந்ததாக இவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவர்கள் இந்த சம்பவத்தின் பின் தமது பயணத்தை இரத்துச் செய்து விட்டு மீண்டும் தமது வீடுகளுக்கு சென்றதாகவும் புலனாய்வு தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.