பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வின் பின் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வவுனியா மாநகரசபை தேர்தல் பரப்புரையை ஆரம்பித்தது.
வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் அன்னை பூபவதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மாநகரசபைக்கான தேர்தல் பரப்புரையை தமிழ் தேசிய மக்கள் முன்னனி இன்று (19.04) ஆரம்பித்தது.
அன்னை பூபதி அவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முனன்னயின வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் தலைமையில் பொங்கு தமிழ் நினைவுத்தூபி முன்றலில் இடம்பெற்றது. இதன்போது அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு தீபம் ஏற்றியும், மலர் தூபியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது, வவுனியா மாநகரசபையில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடந்து வேட்பாளர்கள் தமது துண்டு பிரசுரங்களை வழங்கி வவுனியா நகரில் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.














