உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துனுக்காய் மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேசிய மக்கள் சக்தியில் போட்டி இடும் வேட்பாளர்களை ஆதரித்து மல்லாவி பிரதேசத்தில் பிரதமர் ஹரிணி அமர சூரியா கலந்து கொண்டு வேட்ப்பாளர்களை ஆதரித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது நாட்டையும் பிரதேசங்களையும் சுத்தம் செய்வதற்கும் லஞ்சம் ஊழல் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்புவதற்கு உள்ளூராட்சி சபைகளை நாங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். இதற்க்கு பொது மக்கள் ஆதரவு தரவேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செ.திலகநாதன்,ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர்கள் பொது மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




