ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி 14 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார். இதனால் ஆர்சிபி அணி 14 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தோல்வியடைந்த ஆர்சிபி அணி வீரர் டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் தோல்வியடைந்த அணியின் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார்.
மேலும் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ரன்கள் குவித்த அணியில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் டிம் டேவிட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் மிகக் குறைந்த அரைசதம் அடித்த வீரர்கள் அணி மொத்தம்
டிம் டேவிட் ராயல் (சேலஞ்சர்ஸ் பெங்களூரு) Vs பஞ்சாப் கிங்ஸ் 26 பந்துகளில் 50* 95/9 பெங்களூரு 2025
விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) Vs சென்னை சூப்பர் கிங்ஸ் 29 பந்துகளில் 56 * 106/2 பெங்களூரு 2013
ஆண்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) vs சென்னை சூப்பர் கிங்ஸ் 44 பந்துகளில் 50* 108/9 சென்னை 2019
ரியான் மெக்லாரன் (மும்பை இந்தியன்ஸ்) கிங்ஸ் லெவன் பஞ்சாப் 43 பந்துகளில் 51* 112/8 நவி மும்பை 2011
சாம் கரன் (சென்னை சூப்பர் கிங்ஸ்) Vs மும்பை இந்தியன்ஸ் 47 பந்துகளில் 52 -114/9 ஷார்ஜா