1988
இந்திய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக மட்டக்களப்பில் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்த நிலையில் அன்னை பூபதி உயிர்நீத்தார்.
பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 அன்று தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார். நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.
1995
சந்திரிகா – விடுதலைப்புலிகள்; பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
1810
வெனிசுவேலாவில் ஆளுநர் விசென்டே எம்பரான் கரகஸ் மக்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1818
பிரான்சிய இயற்பியலாளர் அகஸ்டீன் பிரெனெல் “ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய குறிப்பை” வெளியிட்டார்.
1839
இலண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு இராச்சியமாக அறிவிக்கப்பட்டது.
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்டனர். நான்கு படையினரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1903
மல்தோவாவின் கிசினியோவ் நகரில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பாலத்தீனத்திலும், மேற்குலகிலும் அகதிகளாகக் குடியேறினர்.
1936
பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கியது.
1943
இரண்டாம் உலகப் போர்: போலந்தில் நாட்சிகளுக்கு எதிரான யூதர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது.
1943
ஆல்பர்ட் ஹாப்மன் தான் ஏப்ரல் 16 கண்டுபிடித்த எல்எஸ்டி எனும் போதை மருந்தை தனக்குத் தானே முதற் தடவையாக ஏற்றிக் கொண்டார்.
1954
உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
1971
சியேரா லியோனி குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1971
முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1975
இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
1989
அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1993
ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்க எஃப்பிஐ இன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ், மற்றும் 18 சிறுவர்கள் உட்பட 76 பேர் கொல்லப்பட்டனர்.
1995
அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதில் 19 சிறுவர்கள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டனர்.
1999
ஜேர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.
2000
பிலிப்பீன்சின் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 131 பேரும் உயிரிழந்தனர்.
2005
கர்தினால் யோசப் ராட்சிங்கர் பதினாறாம் பெனடிக்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006
நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2011
பிடல் காஸ்ட்ரோ கியூபா பொதுவுடமைக் கட்சியின் முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.
2021
இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி செவ்வாய்க் கோளில் பறந்து வேறொரு கோளில் பறந்த முதலாவது வானூர்தி என்ற சாதனையைப் படைத்தது.
2021
ராவுல் காஸ்ட்ரோ கியூபப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். இதன் மூலம் கியூபாவில் காஸ்ட்ரோ சகோதரர்களின் 62 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.




