சீனாவில் 2050 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ஹூவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் திறப்பதற்கு தயாராக உள்ளது.
உலகின் மிகவும் உயரத்தில் கட்டப்பட்ட பாலம் என்ற பெருமையை இது அடைய உள்ளது.பொறியியல் கலையின் உச்ச வளர்ச்சி என்று வர்ணிக்கப்படும் இந்தப் பாலம் உள்கட்டுமானத்தில் சீனாவின் அசுர வளர்ச்சியையும் பறைசாற்றுகிறது.
மூன்று ஆண்டுகளில் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுமானம் சுமார் 22 ஆயிரம் மெட்ரிக் தொன் எடை கொண்டுள்ளது.
இந்தப் பாலம் அமைக்கப்பட்டதால் அப்பகுதியில் ஒருமணி நேரம் செல்ல வேண்டிய தூரத்தை ஒரு நிமிடத்தில் சென்றடையலாம். இப்பாலத்தை மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாற்றவும் சீனா திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.