ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் எண்ணக்கருவில் உருவாகிய நேர்மையான இலங்கையினை உருவாக்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை மாவட்ட செயலாளரிடம் முறையிடுவதற்கு “உள்ளக அலுவல்கள் அலகு” எனும் பிரிவானது நேற்றையதினம் (16) உத்தியோக பூர்வமாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவின் இணைப்பாளராக மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன் (நிர்வாகம் ) அவர்களும், நேர்மைத்திறன் அலுவலராக நிர்வாக உத்தியோகத்தர் அவர்களுடன் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து தர நிலையினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பாக கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்து மேலதிக நடவடிக்கைக்காக பரிந்துரை செய்வார்கள்.
பொதுமக்கள் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளினை நேரடியாகவோ அல்லது 0212290036 என்ற தொலைபேசி ஊடாகவோ அல்லது gamullaitivu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினூடாகவோ முறையிட முடியும் .


