தமிழ் புத்தாண்டை முன்னிட்டி அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகம் நடாத்திய மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் இருபத்தி ஒரு வயதிற்கு உட்பட்ட பிரிவின் இறுதிப் போட்டியில் குடத்தனை உதயசூரியன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகமும் பங்குபற்றி அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது.
21 வயதிற்கு மேற்பட்ட போட்டியில் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகமும், குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டு கழகமும் மோதின இதில் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.
21 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் வெற்றிபெற்ற கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்திற்கும், விளையாட்டு போட்டிகளை நடாத்திய அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகத்திற்கும் சவால் கிண்ண போட்டி இடம் பெற்றது.
இதிலும் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது.
அம்பன் பிங்பொங் விளையாட்டு கழக தலைவர் க.கருணாகரன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கபந்துகொண்ட அம்பன் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி சிவசுதன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக விளையாட்டு அதிகாரி திரு.கபில்ராம், குடத்தனை கிராம சேவகர் திருப்பதி நிசாந்தன், உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் கழகங்களுக்கான பரிசில்களை நிகழ்வின் பிரதம விருந்தினர், சிறப்பு கௌரவ விருந்தினர்கள் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.
இதில் விளையாட்டு வீரர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டு போட்டிகளை கண்டுகழித்தனர்.


