புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சியில் பச்சை நிற விவசாய வயல்கள் புடைசுடலா பன்னங்கண்டி பகுதியில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவின் போது பக்தர்கள் பறவை காவடி, பால்சொம்பு மற்றும் அங்க பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்களும் செலுத்தி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர் திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
புத்தாண்டு தினத்தில் இத் தேர்த் திருவிழா இடம் பெற்றமையால் கிளிநொச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருகை தந்து பிள்ளையார் பெருமானை வழிபடுவது மட்டுமல்லாது புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டமை சிறப்பம்சமாகும்.






