திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுயியில் நள்ளிரவு (12) நேரத்தில் வீடொன்றுக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதால் வீடு முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முகைதீன் பிச்சை சேகாலம் என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வீட்டில் அன்றிரவு இருக்கவில்லை. இந்த நேரத்தில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வீட்டு உரிமையாளரின் அடுப்பங்கரை பொருட்கள் உட்பட வீட்டு தளபாடங்கள் என பல பொருட்கள் நாநமாகியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.




